Loan வாங்கியோர் கவனத்திற்கு..! குறைத்து REPO... EMIல் அதிரடி மாற்றம்..?

x

நம்ம நாட்டுல இருக்கர வங்கிகளுக்கு மத்திய ரிசர்வ் வங்கி குறுகிய கால கடன்கள் கொடுக்குது. அந்த கடனுக்கு தான் வங்கிகள் ரிசர்வ் வங்கிக்கு வட்டி செலுத்துது. இந்த வட்டி விகிதத்த தான் ரெப்போ ரேட்னு நாம சொல்றோம். நம்ம நாட்டோட பொருளாதார சூழலுக்கு ஏற்ப அப்பைக்கி அப்ப ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்த மாத்தியமைக்கும். அந்த வகையில வங்கிகளுக்கான ரெப்போ விகிதத்த குறச்சிருக்கு ரிசர்வ் வங்கி. இது தொடர்பான அறிவிப்ப வெளியிட்டுருகாரு ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா. இதுல கவனிக்க வேண்டிய விஷயம் இந்த ஆண்டுல இது மூன்றாவது முறை நடக்குற வட்டி விகித குறைப்பு. சரி இந்த அறிவிப்பு மூலமா யார் யாருக்கு என்னன்ன பலன் இருக்கும்னு பார்க்கலாம்.

இப்ப வரைக்கும் 6 சதவிகிதமா இருந்த ரெப்போ வட்டி இப்ப 50 புள்ளிகள் அதாவது 0.5% குறைச்சு 5.50 சதவிகிதமா அறிவிச்சிருக்கு ரிசர்வ் வங்கி. அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்போட வரிவிதிப்பு நடவடிக்கைகள் காரணமா ஏற்றுமதியில ஏற்பட்டிருக்கர பிரச்சினைகள், சர்வதேச பொருளாதார சூழல் இது எல்லாத்தையும் கருத்தில் கொண்டு தான் ரிசர்வ் வங்கி இந்த அறிவிப்ப வெளியிட்டிருக்கரதா சொல்லப்படுது.

இந்த ஆண்டு மட்டுமே இதுவரைக்கும் 3 முறை ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட்டிருக்கு. குறிப்பா சொல்லனும்னா கடந்த 5 ஆண்டுகளா 6.5 சதவிகிதமா இருந்த ரெப்போ விகிதம், போன பிப்ரவரி மாசம் 0.25% ஏப்ரல் மாசத்துல 0.25% குறைக்கப்பட்ட ரெப்போ வட்டி விகிதம் இப்ப 0.5% குறைக்கப்பட்டு இப்ப 5.5% ஆ இருக்கு.

பொதுவாகவே ரெப்போ விகிதம் குறையும் போது வங்கிகளும் தாங்கள் குடுக்கர கடன்களுக்கான வட்டிய குறைக்கும். அதாவது பண விக்கமும் கட்டுக்குள்ள இருந்து பொருளாதார வளர்ச்சியும் பெரிய அளவுல இல்லங்கும்போது தான் ரெப்போ விகிதம் பெரிய அளவுல குறைக்கப்படும், உதாரணமா கோவிட் பெருந்தொற்று காலகட்டத்துல 5.15% துல இருந்து 4 சதவிகிதம் வரைக்கும் குறைக்கப்பட்டுச்சு. ஆனா இப்ப 4 ஆண்டுகள்ள இல்லாத அளாவுக்கு நாட்டோட மொத்த உள்நாட்டு உற்பத்தி குறைஞ்சிருப்பதா ஆய்வுகள் தெரிவிக்கிது. அதனால ஊற்பத்தி துறையில விழுந்த அடிய சரி செய்ய இந்த விகித குரைப்பு நடந்திருக்கலாம்னு சொல்லக்கூடிய வல்லுநருகள் இது மூலமா வங்கிகளும் தங்களோட வாடிக்கையாளர்களுக்கு குறைஞ்ச வட்டியில கடன் குடுக்குனும் சொல்ராங்க.

சரி இதுனால யார் யாருக்கு பலன் கிடைக்கும்னு பார்த்தா, வங்கி, நிதி நீறுவனக்களுக்கு இது சிறந்த அறிவிப்புன்னு சொல்லப்படுது. அதுமட்டும் இல்லாம ரிசர்வ் வங்கியோட இந்த வட்டி குறைப்பு நடவடிக்கை மூலமா வீட்டு கடன் வட்டி குறையர பட்சத்துல க்டன் வாக்கி வீடுகள் வாங்க மக்கள் முன்வருவாங்கன்னும் அதனால ரியல் எஸ்டேட் துரைக்கும் இது சிறந்த அறிவிப்புன்னு சொல்லப்படுது, அதே போல வாகன கடனுக்கான வட்டி குறையும்போது வாகனங்களின் விற்பனை அதிகரிக்கும் இது மூலமா வாகனத்துறை சம்பந்தப்பட்ட நிறுவனங்களோட பங்கும் அதிகரிக்கும்னு கணிக்கப்படுது. அதே போல தனிநபர் கடனுக்கான வட்டியும் குறைய வாய்ப்புகள் அதிகம்னு எதிர்பார்க்கப்படுது. இதெல்லாம் ஒரு பக்கம் வீடு வாகன கடன் வாங்குனவங்களுக்கும் இதுக்கு மேல வாங்கபோரவங்களுக்கும் நல்ல செய்தியா பார்க்கப்பட்டாலும், ரிசர்வ் வங்கியோட இந்த நடவடிக்கை மூலமா வங்கி,நிதி நிறுவனங்கள்ள ஃபிக்சட் டெப்பாசிட், மற்ற சேமிப்பு கணக்குகளுக்கான வட்டி குறைய வாய்ப்பிருக்குமோங்கர கேள்வியும் கவலையும் இன்னொரு பக்கம் அதிகரிக்கிது.


Next Story

மேலும் செய்திகள்