பினாயில் குடித்து தற்கொலை முயற்சி. திருநங்கைகளின் விபரீத முடிவு
மத்திய பிரதேசத்தில் திருநங்கை ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருநங்கைகள் 25 பேர் ஒரே நேரத்தில் தரையை சுத்தம் செய்ய பயன்படுத்தப்படும் பினாயிலை குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், யாருடைய உடல் நிலையிலும் எந்தவிதமான தீவிர பாதிப்பும் ஏற்படவில்லை என சிகிச்சை அளித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து போலீஸ் தரப்பில் இந்த சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணையானது நடைபெற்று வருகிறது.
Next Story
