திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயில் சிலைகளை கடத்த முயற்சி?

x

திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயில் சிலைகளை கடத்த முயற்சி?

கேரள மாநிலம் திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயில் சிலைகளை கடத்த ஒரு கும்பல் முயன்று வருவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

சபரிமலை தங்க கொள்ளை விவகாரத்தில் சிலருக்கு தொடர்பு உள்ளதாக, கேரள மாநில காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளில் ஒருவரான ரமேஷ் சென்னிதலா கூறியதன் அடிப்படையில் டி.மணி என்பவரிடம் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை நடத்தியது. இதில், அவர் திண்டுக்கல் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபரான பாலமுருகன் என்பது தெரியவந்தது.

திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயிலில் சிலைகளை கடத்த முயற்சிகள் நடைபெறுவதாகவும், அதற்காக திட்டமிட்டுள்ள கும்பல் தற்போதும் பணத்துடன் வலம் வருவதாகவும் விசாரணையின் போது கூறியது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்