பீர்பாட்டிலை உடைத்து துண்டில் சுத்தி.. இளைஞர்களுக்கு சரமாரி விழுந்த அடி | Kerala | Viral Video

x

பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த இளைஞரை பீர் பாட்டிலால் கொடூரமாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கொல்லம் வட்டத்தில் அமைந்துள்ள பேருந்து நிறுத்தம் ஒன்றில், ஷம்னாத், சஜீர் உள்ளிட்ட 3 இளைஞர்கள் அமர்ந்திருந்தனர். அப்போது அங்கு வந்த ரஜு, ரைஜு, ஷைஜு ஆகிய மூன்று பேர், பீர் பாட்டிலை உடைத்து அதை துண்டில் சுற்றி, பேருந்து நிறுத்தத்தில் அமர்ந்திருந்த இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தினர். பாதிக்கப்பட்ட இளைஞர்கள் புகார் அளித்துள்ள நிலையில், முன்விரோதம் காரணமாக இந்த சம்பவம் நடந்திருப்பதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்