

அசாம் மாநிலத்தில் குடியுரிமை சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடுக்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து அசாம் மாணவர்கள் கூட்டமைப்பு தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திப்ரூகர் நகர செயலாளர் ஜோதி போரத்கூர் தலைமையில் நடந்த போராட்டத்தில் பா.ஜ.க. தலைவர்களின் முகங்கள் இடம் பெற்ற 50 அடி உயர ராவணனின் உருவ பொம்மையை எரித்து போராட்டம் நடத்தினர்.