அசாம் மாநிலத்தில் 5 இடங்களில் குண்டுவெடிப்பு...

நாடு முழுவதும், குடியரசு தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அசாம் மாநிலத்தில் 5 இடங்களில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன.
அசாம் மாநிலத்தில் 5 இடங்களில் குண்டுவெடிப்பு...
Published on

நாடு முழுவதும், குடியரசு தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அசாம் மாநிலத்தில் 5 இடங்களில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன. திப்ருகர் மாவட்டத்தில் துலியாஜன், தூம்தூமா மற்றும் சோனாரி ஆகிய 5 இடங்களில் குண்டுவெடிப்பு நடைபெற்றுள்ளன. சம்பவ இடத்துக்கு சென்ற பாதுகாப்புப் படையினர், குண்டுவெடிப்பு நடந்த இடங்களில் ஆய்வு நடத்தி வருகின்றனர். இரு சக்கர வாகனத்தில் வந்த தீவிரவாதிகள் கையெறி குண்டு வீசிவிட்டு, தப்பிச் சென்றதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ள போலீசார், உயிரிழப்புகள் எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com