"உச்சநீதிமன்ற தீர்ப்பு ஜனநாயக வரலாற்றில் குறிப்பிடத்தக்க முன்னுதாரணம்" - கேரள முதலமைச்சர் வரவேற்பு

"உச்சநீதிமன்ற தீர்ப்பு ஜனநாயக வரலாற்றில் குறிப்பிடத்தக்க முன்னுதாரணம்" - கேரள முதலமைச்சர் வரவேற்பு
Published on

"உச்சநீதிமன்ற தீர்ப்பு ஜனநாயக வரலாற்றில் குறிப்பிடத்தக்க முன்னுதாரணம்" - கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வரவேற்பு

டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கிய உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு நமது ஜனநாயக வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னுதாரணம் என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், இது நடந்து கொண்டிருக்கும் பொதுத் தேர்தல்களில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்றும், இது ஜனநாயக சக்திகளின் அமோக வெற்றிக்கு வழிவகுக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார். எதிர்ப்பை அடக்குவதன் மூலம் எந்த ஒரு சர்வாதிகார ஆட்சியும் நீண்ட காலம் நீடிக்க முடியாது என்பதற்கு, இது ஒரு வலுவான நினைவூட்டல் என்றும் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வரைக் காவலில் வைத்து, ஜனநாயக அடிப்படைக் கொள்கைகளை சங்பரிவார் நாசப்படுத்தியுள்ளதாகவும் பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com