Arunachal Pradesh Landslide | நடுநடுங்க வைத்த நிலச்சரிவு.. மண்ணில் புதைந்து பலியான 14 பேர்
அருணாச்சல பிரதேசம் மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களில் மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 14 பேர் உயிரிழந்தனர். வடகிழக்கு மாநிலங்களில் தொடர்ச்சியாக பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கும், ஆங்காங்கே நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது.
அருணாச்சலப் பிரதேச மாநிலம், கிழக்கு கமேங் மாவட்டத்தில் உள்ள பனா-செப்பா சாலையில் வியாழக்கிழமை நிலச்சரிவு ஏற்பட்டதில், கார் பள்ளத்தில் விழுந்து 7 பேர் உயிரிழந்தனர். இதேபோல், லோயர் சுபன்சிரி மாவட்டத்தில் நிலச்சரிவில் சிக்கி 2 பேர் உயிரிழந்தனர்.
மிசோரம் மாநிலத்தில, ஐஸ்வால், சம்பாய், மமித் உள்ளிட்ட மாவட்டங்களில் இடைவிடாது பெய்த மழையால், சில இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு, 5 பேர் உயிரிழந்தனர்.
Next Story
