

இந்த நிலையில் சுவிஸ் வங்கியில் உள்ள இந்தியர்களின் பணம் அனைத்தும் கறுப்புப்பணம் அல்ல என்று அருண் ஜெட்லி விளக்கம் அளித்துள்ளார். சுவிஸ் வங்கியில் டெபாசிட் செய்தவர்களில் பெரும்பாலானோர் வெளிநாடு வாழ் இந்தியர்கள் என்றும் சுவிஸ் வங்கியில் இந்தியர்கள் கறுப்புப்பணத்தை டெபாசிட் செய்திருந்தால் கண்டறியப்படும் என்றும் தனது சமூக வலைதளத்தில் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.