டெல்லி - எய்ம்ஸ் மருத்துவமனையில் அருண்ஜெட்லி அனுமதி..

உடல் நலக்குறைவு காரணமாக முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
டெல்லி - எய்ம்ஸ் மருத்துவமனையில் அருண்ஜெட்லி அனுமதி..
Published on

கடந்த பா.ஜ.க. ஆட்சியில், நிதி அமைச்சராக இருந்த அருண் ஜெட்லி, உடல் நலத்தை காரணம் காட்டி தேர்தலில் போட்டியிடவில்லை. இந்நிலையில், உடல் நலக்குறைவால் காரணமாக அருண் ஜெட்லி மீண்டும் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சுவாச கோளாறு ஏற்பட்டுள்ளதாகவும், இதயம் மற்றும் கிட்னி, சிறப்பு மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளிப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அருண் ஜெட்லியின் உடல் நலன் குறித்த விசாரிக்க சென்ற பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய செயல் தலைவர் ஜெ.பி. நட்டா ஆகியோர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வந்து அருண் ஜெட்லியின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com