DTH| Cable TV | கேபிள், DTH சந்தா கட்டணங்கள் உயர்வா? - வெளியான விளக்கம்
கேபிள், DTH சந்தா கட்டணங்கள் உயர்வா? - வெளியான விளக்கம்
கேபிள், DTH சந்தா கட்டணங்கள் உயர்வா? - வெளியான விளக்கம் தொலைக்காட்சி சந்தா கட்டணங்கள் உயர்ந்துள்ளதாக வெளியான தகவல்களுக்கு மத்திய தகவல் சரிபார்ப்பகம் மறுப்பு தெரிவித்துள்ளது... கேபிள் மற்றும் DTH கட்டணங்களையும், உரிமக் கட்டணத்தையும் உயர்த்த மத்திய அரசு வரைவு விதிகளை வெளியிட்டுள்ளதாகவும், இதன்மூலம் வேலைவாய்ப்புகள் குறையும் எனவும் சமூக வலைதளங்களில் தகவல் பரவிவந்தது... இது குறித்து விளக்கமளித்துள்ள மத்திய தகவல் சரிபார்ப்பகம், மத்திய அரசு வெளியிட்டுள்ள வரைவு விதிகளில் கட்டணங்களை உயர்த்துவதற்கான விதிகள் இடம்பெற வில்லை என தெரிவித்துள்ளது... மேலும் தொலைக்காட்சி மற்றும் வானொலி சேவைகளுக்கான வழிகாட்டுதல்களை ஒருங்கிணைப்பதற்கான விதிகளே வெளியிடப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது....
