அபார்ட்மெண்டில் சிதைந்து கிடந்த பெண்ணின் சடலம்.. பார்த்ததும் அதிர்ந்துபோன போலீஸ்

பெங்களூருவின் இந்திராநகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் மாயா கோகாய் என்ற இளம் பெண்ணின் பாதி சிதைந்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விசாரணையில், கடந்த நவம்பர் 23ஆம் தேதி அந்த பெண் ஆரவ் என்ற நபருடன் சேர்ந்து இந்த அபார்ட்மெண்டிற்கு வந்திருப்பது தெரியவந்துள்ளது.

மறுநாள் காலை ஆரவ் மட்டும் அபார்ட்மெண்டை விட்டு வெளியே சென்று உள்ளார். இதனால் இது கொலையாக இருக்கலாம் என போலீசார் சந்தேகித்துள்ளனர். மேலும், இந்த கொலைக்கு பின்னணியில் வேறு யாரேனும் உள்ளனரா ? என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.

X

Thanthi TV
www.thanthitv.com