

அதிநவீன தொழிநுட்பங்களை கொண்ட அபாச்சி ரக போர் ஹெலிகாப்டர் இந்திய விமானப்படையில் இன்று இணைக்கப்படவுள்ளது.கடந்த ஜூலை மாதம் உத்தரபிரதேசத்தின் காசியாபாத்தில் உள்ள ஹிண்டன் விமான தளத்தில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த ஹெலிஹாப்டர்,பஞ்சாப் மாநிலத்தின் பதான்கோட் விமானப்படை தளத்தில் முறைப்படி விமானப்படையில் இணைக்கப்பட உள்ளது.