மீண்டும் மேக வெடிப்பு - ஜம்மு காஷ்மீரில் 11 பேர் உயிரிழப்பு

x

மீண்டும் மேக வெடிப்பு - 11 பேர் பலி

கடந்த ஒரு வாரமாக கொட்டி தீர்த்து வரும் கனமழையால் கடும் வெள்ள பாதிப்புக்கு ஆளாகியுள்ள ஜம்மு காஷ்மீரின் ரியாசியில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேரும் , ராம்பான் மாவட்டத்தில் ஏற்பட்ட மேக வெடிப்பால் நான்கு பேரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வரும் செப்டம்பர் இரண்டாம் தேதி வரை ஜம்மு காஷ்மீரில் மிக கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த வாரம் மட்டும் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ள பாதிப்புக்கு ஜம்மு காஷ்மீரில் 56 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்