காதல் திருமணத்தால் ஆத்திரம்... அடித்து நொறுக்கிய பெண் உறவினர்கள்
ஓமலூர் அருகே காதல் திருமணம் செய்த நபரின் வீட்டை அடித்து நொறுக்கிய பெண்ணின் உறவினர்கள் மீது போலிசார் வழக்கு பதிவு செய்தனர். சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே கருப்பனம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் கோகுல் மற்றும் ரட்சிதா இருவரும் காதலித்து வீட்டில் இருந்து வெளியேறி திருமணம் செய்துள்ளனர். இதானல் ஆத்திரம் அடைந்த ரட்சிதா உறவினர்கள் கோகுல் குடும்பத்தினர் வசித்து வரும் வீட்டை அடித்து நொறூக்கி பொருட்களை சேதபடுத்தினர். இது தொடர்பாக ஓமலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தாக்குதலில் ஈடுபட்ட பெண் வீட்டாரை தேடி வருகின்றனர்.
Next Story
