கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் ஆத்திரம் - கழுத்தை அறுத்து கணவர் கொடூர கொலை

ஒசூர் அருகே தகாத உறவுக்கு இடையூறாக இருந்த கணவனை மனைவியே தீர்த்துக்கட்டிய சம்பவத்தின் பின்னணியை பற்றி விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் ஆத்திரம் - கழுத்தை அறுத்து கணவர் கொடூர கொலை
Published on

ஒசூர் அருகே தகாத உறவுக்கு இடையூறாக இருந்த கணவனை மனைவியே தீர்த்துக்கட்டிய சம்பவத்தின் பின்னணியை பற்றி விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு. ஒசூர் அருகேயுள்ள உனிசெட்டி கிராமத்தை சேர்ந்தவர் அய்யப்பன். சரக்கு வாகன ஓட்டுநராக இருந்து வந்தார். இவரின் மனைவி ரூபா. இவர்களுக்கு 3 பிள்ளைகள் உள்ளனர். அய்யப்பனின் உறவினரான 20 வயதான தங்கமணி என்பவர் இவர்களின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்போது ரூபாவுடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. ரூபாவை விட தங்கமணி 5 வயது குறைந்தவர் என்பதாலும் உறவு முறையில் ரூபாவுக்கு தங்கமணி மகன் முறை என்பதாலும் முதலில் யாருக்கும் சந்தேகம் ஏற்படவில்லை. இதை பயன்படுத்திக் கொண்ட அவர்கள், தங்கள் காதலை வளர்த்து வந்துள்ளனர். இந்த சூழலில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பாக தன் பிள்ளைகள் மற்றும் கணவரை மறந்து தங்கமணியுடன் ஓட்டம் பிடித்தார் ரூபா. இருவரும் பெங்களூருவில் குடும்பம் நடத்தி வந்ததை அறிந்த உறவினர்கள் அங்கு நேரில் சென்று இருவரையும் பிடித்து சொந்த ஊருக்கு அழைத்து வந்துள்ளனர். இருவருக்கும் அறிவுரைகளை கூறி அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைத்தனர். குழந்தைகளின் நலனுக்காக மனைவியுடன் வாழ்வதில் விருப்பமாக இருந்துள்ளார் அய்யப்பன். ஆனால் ரூபாவோ, தன் கள்ளக்காதலனுடன் வாழ்வதையே விரும்பியதால் இருவருக்கும் இடையே அடிக்கடி பிரச்சினை இருந்துள்ளது. இந்த சூழலில் தான், தன் வீட்டில் ரத்த வெள்ளத்தில் சடலமாக மீட்கப்பட்டார் அய்யப்பன். அவரின் கையில் கத்தி ஒன்றும் இருந்த நிலையில் தற்கொலையாக இருக்கலாம் என கூறப்பட்டது. தன் கணவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறி ரூபா கண்ணீர் விட்டு கதறி அழுதுள்ளார். ஆனாலும் அதற்கு முன்பாக ரூபாவின் நடவடிக்கைகள் உள்ளிட்டவை போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தவே அவர்கள் தங்கள் பாணியில் விசாரணை நடத்தினர். அப்போது தான் அய்யப்பன், தனது மனைவி மற்றும் அவரின் கள்ளக்காதலனால் கொடூரமாக கொல்லப்பட்டது தெரியவந்தது. காதலனுடன் வாழ விரும்பிய ரூபா, தங்கமணியுடன் சேர்ந்து கணவருக்கு மது வாங்கி கொடுத்துள்ளார். பின் அவரின் கை, கால்களை கட்டி கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்ததாக போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார். பின்னர் தற்கொலை என கூறி நாடகமாடிவிட்டு தப்பித்து விடலாம் என திட்டம் தீட்டியதையும் அவர்கள் ஒப்புக் கொண்டனர்.

இதன்பேரில் ரூபா மற்றும் அவரது கள்ளக்காதலன் தங்கமணியை போலீசார் கைது செய்தனர். 2 பேரின் தவறான உறவு அவர்களை கொலையாளி ஆக்கியதோடு 3 குழந்தைகளின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கி இருக்கிறது...

X

Thanthi TV
www.thanthitv.com