"பால்வாடியில் பிரியாணியும் பொரிச்ச கோழியும் வேணும்" - அரசின் கதவை தட்டிய மழலை குரல்.. வரும் மாற்றம்

x

கேரளாவில் அங்கன்வாடி மையத்தில் பிரியாணி, பொரித்த கோழி வழங்க வேண்டும் என்று கேட்கும் குழந்தையின் வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. இந்த வீடியோவை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள கேரள மாநில குழந்தைகள் நலத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ், குழந்தையின் கோரிக்கையை பரிசீலித்து அங்கன்வாடியின் மெனு திருத்தப்படும் என்று தெரிவித்துள்ளார். குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து நிறைந்த உணவை உறுதி செய்வதற்காக அங்கன்வாடிகள் மூலம் பல்வேறு வகையான உணவுகள் வழங்கப்படுவதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்