எம்எல்சி ஷேக் சாப்ஜி கார் விபத்து - ஜெகன் மோகன் ரெட்டி இரங்கல்

ஆந்திர மேல்சபை உறுப்பினர் ஷேக்சாப்ஜி, கார் விபத்தில் உயிரிழந்துள்ளார். ஏலூரில் அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டத்தில் கலந்துகொள்வதற்காக காரில் அவர் சென்று கொண்டிருந்தார். மேற்கு கோதாவரி மாவட்டம் செருக்குவாடா அருகே கார் சென்று கொண்டிருந்த போது, எதிரில் வந்த கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், எம்எல்சி ஷேக் சாப்ஜி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கார் ஓட்டுநர் மற்றும் பாதுகாவலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஷேக் சாப்ஜி மறைவுக்கு, ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி, எதிர்க்கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com