YSR காங். - தெலுங்கு தேசம் கட்சியினர் கற்களை வீசி மோதல் - பரபரப்பில் ஆந்திரா | Andhra Pradhesh

x

ஆந்திராவில், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியினர் பா.ஜ.கவில் இணைவதை கண்டித்து தெலுங்கு தேசம் கட்சியினர் நடத்திய தாக்குதலில் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் நிர்வாகிகளை பா.ஜ.கவில் சேர்க்கும் பணியில் அமைச்சர் சத்யகுமார் யாதவ் ஈடுபடுவது, தெலுங்கு தேசம் கட்சியினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மாவரத்தில் பேனர்களை அகற்றுவது தொடர்பாக தெலுங்குதேசம் கட்சியினருக்கும், கட்சி மாற இருக்கும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையே மோதல் வெடித்து, ஒருவரையொருவர் கற்களால் தாக்கிக் கொண்டனர். இதில் இரண்டு கார்கள், மூன்று பைக்குகள் சேதமடைந்தன.


Next Story

மேலும் செய்திகள்