Andhrapradesh | தலைக்கு மேல் மின் கம்பம் - நூலிழையில் உயிர் தப்பிய சிறுவன்.. வெளியான பகீர் காட்சி
ஆந்திராவில் உயர் அழுத்த மின் கம்பம் திடீரென சரிந்து விழுந்ததில் பள்ளி மாணவன் ஒருவர் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார்.. குர்னூல் நகரில் உள்ள அசோக் நகர் பகுதியில் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த ஒரு சிறுவன் மீது திடீரென மின் சரிந்து விழுந்த சம்பவத்தில் நொடிப்பொழுதில் அந்த சிறுவன் உயிர் தப்பினான். மாணவன் இன்னும் ஒரு அடி முன்னே சென்றிருந்தால் பெரும் விபத்து நடந்திருக்க வாய்ப்பு இருந்ததாக கூறப்படுகிறது. சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் மின்சார இணைப்பை துண்டித்து, சாலையில் விழுந்த கம்பத்தையும் வயர்களையும் அகற்றும் பணியில் ஈடுபட்டனர். ஆரம்ப விசாரணையில், பழுதடைந்த மின் கம்பம் மற்றும் பலத்த காற்று இந்த விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.
Next Story
