குழந்தைகளை போல 58 நாய்களை வளர்க்கும் தம்பதியர்

ஆதரவின்றி திரியும் நாய்களுக்கு அடைக்கலம் கொடுத்த மனிதநேயம்

ஆந்திர மாநிலம் காளஹஸ்தியை அடுத்துள்ள நாகலாபுரம் மண்டலம் ராஜூல கண்டிகை கிராமத்தை சேர்ந்தவர் ஏசு பாதம்.. இவரின் மனைவி ரிபாக்கா.. இவர்களுக்கு பிரியா என்ற மகளும் உள்ளார். ஆனால் இவர்கள் வீட்டில் இந்த 3 பேருடன் சேர்ந்து 58 நாய்களும் வீட்டின் உறுப்பினர்கள் போலவே உலா வருவது தான் கண்கொள்ளா காட்சியாக இருக்கிறது. யாருடைய ஆதரவும் இன்றி சாலைகளில் விட்டுச் செல்லப்படும் நாய்களை எல்லாம் தன் வீட்டிற்கு அழைத்து வந்து போதுமான உணவு கொடுத்து அன்போடு பராமரித்து வருகின்றனர். நாய்களை குளிக்க வைப்பது முதல் அவைகளுக்கு போதுமான உணவுகள் வழங்கி, நோய்த் தொற்று மருந்துகளையும் உரிய நேரத்தில் வழங்கி வருகிறார்கள் இந்த தம்பதியர். பைரவ ஆசிரமம் என்ற அடையாளமே தங்களுக்கு மகிழ்ச்சியை தருவதாக கூறுகிறார் ஏசுபாதம்... சமீபத்தில் ஒரு நாய்க்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து அவர்கள் சென்னைக்கு அழைத்து வந்து சிகிச்சை அளித்து வந்திருக்கிறார்கள்...

X

Thanthi TV
www.thanthitv.com