"5 வயது சிறுமியை பலாத்காரம் செய்த சிறுவன் - டிஷா சட்டத்தின் கீழ் முதல் வழக்கு பதிவு"

ஆந்திர மாநிலம் குண்டூரில் 5 வயது சிறுமியை , 16 வயது பள்ளி மாணவன் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
"5 வயது சிறுமியை பலாத்காரம் செய்த சிறுவன் - டிஷா சட்டத்தின் கீழ் முதல் வழக்கு பதிவு"
Published on

குண்டூர் நகரில் வசித்து வரும் பெண் ஒருவர் தனது 5 வயது மகளை வீட்டில் தனியாக விட்டுச் சென்றுள்ளார்.அதன்பின் அந்த சிறுமி தான் குடியிருக்கும் வீட்டு உரிமையாளர் வீட்டில் டிவி பார்க்க சென்றார். அப்போது சிறுமியை வீட்டு உரிமையாளரின் 16 வயது மகன் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதை யாரிடமாவது சொன்னால் கொலை செய்துவிடுவேன் என்றும் அவன் மிரட்டியுள்ளான்.இதனையடுத்து வயிற்று வலியால் துடித்த சிறுமியை தாய் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்ததையடுத்து போலீசில் தாய் புகார் அளித்துள்ளார்.போக்சோ சட்டத்தில் சிறுவனை கைது செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். டிஷா சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட முதல் வழக்கு இதுவாகும்.

X

Thanthi TV
www.thanthitv.com