

ஆந்திர மாநிலம் கூடூரை சேர்ந்த சாந்தினி பாஷா என்பவர், சென்னை சென்ட்ரலில் இருந்து ரயிலில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது எண்ணூர் அருகே, சிக்னலுக்காக ரயில் மெதுவாக சென்றபோது, நான்கு பேர் திடீரென அவரது செல்போனை பறித்துக்கொண்டு ஓடினர். அவர்களை பிடிக்க முயன்றபோது, ரயிலில் இருந்து கீழே விழுந்து சாந்தினி பாஷா உயிரிழந்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்த கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார், செல்போன் பறிப்பில் ஈடுபட்ட எண்ணூரை சேர்ந்த நாகராஜ், மகேஷ், பிரகாஷ் மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோரை கைது செய்துள்ளனர்.