ஆந்திராவில் ரயில்கள் மோதி கோர விபத்து..! நேரில் பார்வையிட்ட ஆந்திர முதல்வர் | Andhra Train Accident

ஆந்திர மாநிலம், விஜயநகரம் மாவட்டம் கண்டகபள்ளி அருகே நேற்று இரவு இரண்டு ரயில்கள் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 14 பேர் உயிரிழந்த நிலையில் சுமார் 50 பேர் படுகாயம் அடைந்து விசாகப்பட்டினத்தில் உள்ள கே ஜி எஃப் மருத்துவமனை மற்றும் விஜயநகரம் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், விபத்து நிகழ்ந்த இடத்திற்கு வந்த ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, மீட்பு பணிகளை ஹெலிகாப்டரில் இருந்து பார்வையிட்டார்.

பின்னர், விசாகப்பட்டினத்தில் உள்ள கே ஜி எஃப் மருத்துவமனை மற்றும் விஜயநகரம் அரசு மருத்துவமனைகளுக்கு சென்று விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். மருத்துவர்களிடம் பேசி தரமான சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டார்.

X

Thanthi TV
www.thanthitv.com