

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் காளஹஸ்தி சிவன் கோயிலில் கடந்த ஆகஸ்ட் 28 ஆம் தேதி முதல் செப்டம்பர் ஒன்றாம் தேதி வரை பவித்ரோற்சவம் நடந்து வருகிறது. இதில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், கோயிலில் நடக்கும் ராகு - கேது சர்பதோஷ நிவாரண பூஜைகளில் பக்தர்கள் வழக்கம்போல் கலந்து கொள்ளலாம் என கோயில் நிர்வாக அதிகாரி சந்திரசேகர ரெட்டி தெரியப்படுத்தியுள்ளார். பவித்ரா உற்சவத்தின் இரண்டாவது நாளான இன்று, சிறப்பு அபிஷேகங்களும் , பூஜைகளும் நடத்தப்பட்டன.