கிருஷ்ணாபுரம் அணையில் மூழ்கி பள்ளி மாணவன் பலி

மாணவனின் உடலை தேடும் பணி தீவிரம்
கிருஷ்ணாபுரம் அணையில் மூழ்கி பள்ளி மாணவன் பலி
Published on
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாபுரம் அணையில் மூழ்கி 11ம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சித்தூர் மாவட்டம் வேடுருகுப்பம் கிராமத்தை சேர்ந்த சிவா பிரசாத் என்ற மாணவன் நேற்று நண்பர்களுடன் கிருஷ்ணாபுரம் அணைக்கு குளிக்க சென்றபோது எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தார். தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சிவா பிரசாத்தின் உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர். இரண்டாவது நாளாக மாணவனின் உடலை தேடும் பணி நடைபெற்று வருகிறது
X

Thanthi TV
www.thanthitv.com