ஆந்திரா : மொட்டை மாடி இடிந்து விழுந்து விபத்து - 20 பேர் காயம்-

ஆந்திரா மாநிலத்தில், மொட்டை மாடி கட்டடத்தின் ஒரு பகுதி சரிந்து, மொஹரம் ஊர்வலத்தில் விழுந்த விபத்தில், 20 பேர் காயம் அடைந்தனர்.
ஆந்திரா : மொட்டை மாடி இடிந்து விழுந்து விபத்து - 20 பேர் காயம்-
Published on
ஆந்திரா மாநிலத்தில், மொட்டை மாடி கட்டடத்தின் ஒரு பகுதி சரிந்து, மொஹரம் ஊர்வலத்தில் விழுந்த விபத்தில், 20 பேர் காயம் அடைந்தனர். கர்னூல் மாவட்டம் பி.தந்திரபாடு கிராமத்தில், இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. ஊர்வலத்தில் கலந்து கொண்ட இஸ்லாமியர்கள், காயம் அடைந்தவர்களை உடனடியாக மீட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து காரணமாக மொஹரம் ஊர்வலம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
X

Thanthi TV
www.thanthitv.com