

ஆந்திராவில், காவலர்கள் தங்கி இருந்த அறையை 7வயது சிறுமி சுத்தம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆத்மகூரில் உள்ள அரசு கல்லூரியில் விடைத்தாள் திருத்தும் பணிக்கு பாதுகாப்பு அளிக்க தலைமை காவலர்கள் வந்துள்ளனர். அவர்கள் தங்குவதற்கு ஒதுக்கப்பட்ட அறைகளை, கல்லூரி காவலாளியின் 7 வயது மகள் சுத்தம் செய்துள்ளார். சிறுமி சுத்தம் செய்யும் வீடியோ வேகமாக பரவிய நிலையில் காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாநில டிஜிபி கெளதம் உத்தரவிட்டுள்ளார்.