

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் அரசுக்கு எதிரான பேருந்து யாத்திரையை துவக்கி வைக்க வந்த சந்திரபாபு நாயுடுவை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆந்திராவில் மூன்று தலைநகர் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தெலுங்கு தேசம் கட்சி சார்பில் பேருந்து யாத்திரை நடைபெறுகிறது. விஜயவாடாவில் இதற்கான நிகழ்ச்சியை தொடங்கி வைக்க, சந்திரபாபு நாயுடு வந்திருந்தார். இதனிடையே, அந்த பேருந்து யாத்திரை தொடங்குவதற்கு முன்பு போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர்.