ஆந்திரா : வாகன சோதனையில் ரூ.3 கோடி மதிப்புள்ள செம்மரங்கள் பறிமுதல்

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் எர்ர செருவு கிராஸ் என்ற இடத்தில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.
ஆந்திரா : வாகன சோதனையில் ரூ.3 கோடி மதிப்புள்ள செம்மரங்கள் பறிமுதல்
Published on
ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் எர்ர செருவு கிராஸ் என்ற இடத்தில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்பொழுது அவ்வழியாக வந்த லாரியை போலீசார் நிறுத்தி சோதனை செய்ய முயன்ற போது அதில் இருந்தவர்கள் லாரியை நிறுத்திவிட்டு தப்பி செல்ல முயன்றுள்ளனர். அவர்களை விரட்டி பிடித்த போலீசார், லாரியில் இருந்த 3 கோடி ரூபாய் மதிப்புள்ள 90 செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்தனர். மேலும் செம்மர கடத்தலில் ஈடுபட்ட, கொல்கத்தாவை சேர்ந்த ரானாதத்தா, கடலூரை சேர்ந்த உலகநாதன் மற்றும் வேலு ஆகியோரை கைது செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
X

Thanthi TV
www.thanthitv.com