Andhra Pradesh | கொதிக்கும் பாலில் விழுந்து 16 மாத குழந்தை துடிதுடித்து பலி.. பகீர் சிசிடிவி
ஆந்திராவுல அரசுப் பள்ளியில், மாணவிகளுக்காக வைத்திருந்த சூடான பால்ல, 16 மாத குழந்தை விழுந்த சம்பவம் அதிர்ச்சிய ஏற்படுத்தியிருக்கு.. ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள பிற்படுத்தப்பட்ட பெண்கள் நலப் பள்ளி விடுதியில் சமையல் பணியில் கிருஷ்ணவேணி என்பவர் ஈடுபட்டுள்ளார். இவருக்கு 16 மாத பெண் குழந்தை உள்ள நிலையில், குழந்தையுடன் பணிக்கு வந்த கிருஷ்ணவேணி, சமையல் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். பெரிய பாத்திரத்தில் பாலை சூடாக காய்ச்சி வைத்து விட்டு சமையலறைக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு விளையாடிக் கொண்டிருந்த 16 மாத சிறுமி அக்ஷிதா பால் வைத்திருந்த பாத்திரத்தில் அருகே சென்று பாத்திரத்திற்குள் விழுந்தது. இதையடுத்து குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தது. இச்சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
Next Story
