ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் கொம்மரோலு மண்டலம் நாகிரெட்டி பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சைதன்யா. சைதன்யாவும், இந்திரஜா என்ற பெண்ணும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர். மகள் இந்திரஜாவின் காதல் குறித்து, அறிந்த அவரது தந்தை அவுலைய்யா, சைதன்யாவை காதலிப்பதை விட்டுவிட வேண்டும் என எச்சரித்துள்ளார். ஆனால் இந்திரஜா காதலை தொடர்ந்ததால், மகளை கொலை செய்து தூக்கில் மாட்டியுள்ளார். பின்னர், மகளின் உடலை, எரித்து கொண்டிருந்ததை, கண்ட கிராம மக்கள், போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து கொம்மரோலு போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.