ஆந்திராவில் பட்டப்பகலில் பயங்கரம் : நடுரோட்டில் கொலை செய்த 4 பேர் கும்பல்

ஆந்திர மாநிலம் குண்டூரில் 4 பேர் கொண்ட கும்பல், ஒருவரை பட்டபகலில் விரட்டி விரட்டி வெட்டி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் செருக்கு பள்ளியை சேர்ந்த பிரேம்குமார் என்பவர் கொலை வழக்கில் 5 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று சமீபத்தில் விடுதலையாகி வந்துள்ளார். இந்த நிலையில் மதுபானகடைக்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்துகொண்டு இருந்த பிரேம்குமாரை 4 பேர் கொண்ட கும்பல் பட்டபகலில் விரட்டி விரட்டி வெட்டியுள்ளது. இதனால் படுகாயம் அடைந்த பிரேம்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கொலை நடந்த இடம் அருகே இருந்த சிசிடிவி கேமராவை கைப்பற்றிய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com