டேங்கர் லாரி-செம்மர கடத்தல் வாகனம் மோதல் - கடத்தல்காரர்கள் 4 பேர் உடல் கருகி பலி

ஆந்திராவில் செம்மரம் கடத்தி சென்ற சுமோ வாகனம் தீப்பற்றி எரிந்ததில் செம்மரக் கடத்தல்காரர்கள் 4 பேர் உடல் கருகி பலியாகினர்.
டேங்கர் லாரி-செம்மர கடத்தல் வாகனம் மோதல் - கடத்தல்காரர்கள் 4 பேர் உடல் கருகி பலி
Published on
ஆந்திர மாநிலம் கடப்பா விமான நிலையம் அருகே இன்று காலை டீசல் டேங்கர் லாரியும், சுமோ வாகனமும் மோதி விபத்துக்கு உள்ளானது. இதில் டேங்கர் லாரியில் இருந்த டீசல் சுமோ மீது கொட்டியது. இதில் சுமோ வாகனம் தீப்பிடித்து எரிந்தது. இதனால், வாகனத்தில் இருந்த 4 பேரும் உடல் கருகி பலியாகினர். இதனிடையே, பின்னால் வந்த மற்றொரு கார் சுமோ மீது மோதி விபத்துக்கு உள்ளானது. இதில் காரில் பயணித்த 3 பேர் படுகாயம் அடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், எரிந்த சுமோ வாகனத்தை சோதனை செய்தபோது, அதில் செம்மரம் கடத்தப்பட்டது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து செம்மரத்தை கடத்தியவர்கள் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
X

Thanthi TV
www.thanthitv.com