கொரோனா தொற்று காரணமாக 10 வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய ஆந்திரா அரசு முடிவு

ஆந்திராவில் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை ரத்து செய்ய உள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
கொரோனா தொற்று காரணமாக 10 வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய ஆந்திரா அரசு முடிவு
Published on

ஆந்திராவில் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை ரத்து செய்ய உள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக அம்மாநில கல்வித்துறை அமைச்சர் சுரேஷ் வெளியிட்டுள்ள செய்தியில், கொரோனா பரவல் காரணமாக ஆந்திர மாநிலத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்ய அரசு முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார். அனைத்து மாணவர்களும் தேர்ச்சி செய்யப்படுவார்கள் என்றும், ஏற்கெனவே பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தற்போது மதிப்பெண்கள் கணக்கிடப்படும் என்றும் கூறினார். சுமார் 6 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுத இருந்ததாக ஆந்திர அரசு தெரிவித்துள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com