இளம் காதல் தம்பதி தற்கொலை : தனியாக வசித்து வந்த நிலையில் விபரீத முடிவு

ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினம் அருகே இளம் காதல் தம்பதி தற்கொலை செய்துக்கொண்டது குறித்து, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
இளம் காதல் தம்பதி தற்கொலை : தனியாக வசித்து வந்த நிலையில் விபரீத முடிவு
Published on

காஜுவாக பகுதியில், நரேந்திரா மற்றும் டில்லீஸ்வரி கடந்த ஒன்பது மாதங்களுக்கு முன்னர் காதல் திருமணம் செய்து கொண்டனர். இருவீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தனி வீடு எடுத்து அவர்கள் குடும்பம் நடத்தி வந்தனர். இந்த நிலையில், இன்று காலை அவர்கள் வசித்த வீட்டில், மின்விசிறியில், இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். தகவல் அறிந்து வந்த போலீசார், அப்பகுதி மக்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது பெற்றோர் எதிர்ப்பை மீறி இருவரும் கடந்த 9 மாதங்களுக்க முன் திருமணம் செய்துக்கொண்டு, தனியாக வசித்து வந்தது தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்து, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com