உயிருடன் இருந்த குழந்தையை இறந்ததாக கூறிய மருத்துவர்கள் - மருத்துவர்கள் அலட்சியத்தால் பெற்றோர் அதிர்ச்சி

ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டத்தில், அரசு மருத்துவமனையில், இறந்து பிறந்ததாக கூறிய குழந்தை உயிருடன் இருந்ததால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.
உயிருடன் இருந்த குழந்தையை இறந்ததாக கூறிய மருத்துவர்கள் - மருத்துவர்கள் அலட்சியத்தால் பெற்றோர் அதிர்ச்சி
Published on

ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டத்தில், அரசு மருத்துவமனையில், இறந்து பிறந்ததாக கூறிய குழந்தை உயிருடன் இருந்ததால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். கொத்த கோடா மலை கிராமத்தை சேர்ந்த 6 மாத கர்ப்பிணியான சுனிதா வலி ஏற்பட்டதால், சித்தூர் அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வயிற்றில் உள்ள குழந்தை இறந்து விட்டதாகவும், உடனடியாக அறுவை சிகிச்சை செய்து குழந்தையை எடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளனர். இதையடுத்து, அறுவை சிகிச்சையில், இரட்டை குழந்தைகள் இறந்த நிலையில் எடுக்கப்பட்டதாக மருத்துவர்கள் உடல்களை அளித்தனர். அந்த உடல்களுடன் பெற்றோர் புறப்பட்டபோது, ஒரு குழந்தையிடம் அசைவுகள் இருந்ததை அடுத்து, அந்த மருத்துவமனையிலேயே சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டது. இந்த, சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com