"கருமேகங்கள் கலைகின்றன" படத்தை குறித்து அன்புமணி பரபரப்பு ட்விட் | Karumegangal Kalaigindrana

தங்கர் பச்சான் இயக்கத்தில் வெளியான 'கருமேகங்கள் கலைகின்றன' படத்தை, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெகுவாக பாராட்டியுள்ளார். இது குறித்து தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், தற்போது வெளியாகும் படங்களில் வன்முறை, ஆபாசம் நிறைந்துள்ள நிலையில், இப்படம் குடும்ப உறவுகளின் மகிமை, பாசம், கலாச்சாரம் குறித்து பேசுவதாக தெரிவித்துள்ளார். இப்படத்தில் நடித்த அனைவரும் கதாபாத்திரங்களாகவே வாழ்ந்து இருப்பதாக பாராட்டியுள்ள அவர், அனைவரும் பார்க்க வேண்டிய படம் என குறிப்பிட்டுள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com