அம்பானி மகன் திருமண விழாவில் பிரபலங்கள்

அம்பானி மகன் திருமண விழாவில் பிரபலங்கள்
Published on

அம்பானி இல்ல திருமணத்தில் ரஜினி உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் மற்றும் பல்வேறு துறையினரும் பங்கேற்றனர்

ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானியின் திருமண நிகழ்ச்சி மும்பை ஜான் நகரில் உள்ள முகேஷ் அம்பானியின் ஜியோ உலக மாநாட்டு மையத்தில் பிரமாண்டமாக நடந்து வருகிறது. இந்த திருமண விழாவில் நடிகர் ரஜினிகாந்த் அவரது குடும்பத்துடன் கலந்து கொண்டார். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் மற்றும் இயக்குனர் அட்லி ஆகியோரும் இந்த விழாவில் கலந்து கொண்டனர். இதை தவிர்த்து கிரிக்கெட் வீரர் தோனி தனது மனைவியுடனும் ஜெனிலியா தனது கணவருடனும் இந்த விழாவில் கலந்து கொண்டனர். பாலிவுட் நடிகர்களான அனில் கபூர், மற்றும் சஞ்சய் தத் உள்ளிட்ட பல பிரபலங்கள் அம்பானி வீட்டில் திருமண விழாவில் கலந்து கொண்டனர்.

விழாவில் சிவமணியின் டிரம்ஸ் இசை உள்ளிட்ட இசை நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பிரபலங்கள் பங்கேற்று நடனமாடினார்கள். மணமகன் ஆனந்த் அம்பானியோடு இணைந்து, கிளாசிக் ஹிந்தி பாடல் ஒன்றுக்கு ஜாலியாக ரஜினிகாந்த் மற்றும் அனில்கபூர் உள்ளிட்டோர் நடனமாடினர்.

X

Thanthi TV
www.thanthitv.com