ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் திருமணத்தை முன்னிட்டு நடைபெற்ற சீர்வரிசை வழங்கும் விழாவான மொசலு உற்சாகமாக நடைபெற்றது... தொழிலதிபர் முகேஷ் அம்பானி - நீதா அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமணம் விரைவில் நடைபெற உள்ள நிலையில், குஜராத் கலாச்சாரப்படி கொண்டாடப்படும் திருமணத்திற்கு முந்தைய மொசலு விழா நீதா அம்பானியின் தாயார் பூர்ணிமா தலால் மற்றும் அவரது சகோதரி மம்தா தலால் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது... மணமகனின் தாய் மாமாக்கள் மற்றும் குடும்பத்தினர் மணமகனுக்கு சீர் வரிசை கொண்டு வந்தனர்...