கட்சி தலைவரை பளார் பளார் என கன்னத்தில் அறைந்த நிர்வாகி... உ.பி-யில் அதிர்ச்சி சம்பவம்
உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்பூரில் சுஹேல்தேவ் ஸ்வாபிமான் கட்சி தேசிய தலைவர் மகேந்திர ராஜ்பருக்கு மாலை அணிவித்த கட்சி நிர்வாகி ஒருவர், அவரை சரமாரியாக கன்னத்தில் அறைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆஷாபூர் கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கட்சித் தொண்டரான பிரிஜேஷ் ராஜ்பர் என்பவர், முதலில் மகேந்திர ராஜ்பருக்கு மாலை அணிவித்தார். தொடர்ந்து, சில வினாடிகளில், சரமாரியாக கன்னத்தில் அறைந்ததால் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் குழப்பம் அடைந்தனர்.
Next Story
