திடீரென மிரண்டு ஓடிய யானை - சிக்கிய 7 பேர்.. களேபரமான திருவிழா
பிரசித்தி பெற்ற கூட்டாஞ்சேரி சிவன் கோயில் திருவிழாவின் போது ஒலிபெருக்கியின் சத்தத்தைக் கேட்டு பீதியடைந்த யானை, மிரண்டு ஓட தொடங்கியது. திருவிழாவில் கூடி இருந்த பக்தர்கள் யானை மிரண்டு ஓடுவதை பார்த்து பீதியில் ஓட்டம் பிடித்தனர். அப்போது கீழே விழுந்ததில் 7 பேர் காயம் அடைந்தனர். பின்னர், மிரண்டு ஓடிய யானையை அதன் பாகன் உடனடியாக தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார். இந்த சம்பவத்தால் அந்த பகுதியே கலவர பூமியை போல காட்சியளித்தது.
Next Story
