கோவில் வாசலில் போட்டோ எடுத்த முதியவர் போன் கேலரியை பார்த்து ஷாக்கான இளம் பெண்
ராஜஸ்தான் மாநிலம் மவுன்ட் அபுவில் உள்ள தில்வாரா ஜெயின் கோவிலில் இளம்பெண்ணை முதியவர் ஒருவர் ஆபாசமாக புகைப்படம் எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...கோவில் முன்பாக அமர்ந்து அந்த இளம்பெண் தன் பெற்றோருக்காக காத்துக் கொண்டிருந்தார்... அப்போது அப்பெண் அசவுகரியமாக உணரும் வகையில் பார்த்துக் கொண்டிருந்த முதியவர் ஒருவர் திடீரென தனது செல்போனில் அப்பெண்ணின் கால்களை புகைப்படம் எடுத்துள்ளார்... இதையறிந்த அப்பெண் முதியவரிடம் முறையிட்ட நிலையில், முதலில் அவர் மறுத்துள்ளார்... செல்போனை வாங்கிப் பார்த்த போது அந்த முதியவர் புகைப்படம் எடுத்தது உறுதியானது.
இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது... உடனடியாக அந்த முதியவரை போலீசார் கைது செய்ய வேண்டும் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Next Story
