அமீபிக் மூளைக்காய்ச்சல்.. மேலும் ஒருவருக்கு கன்பார்ம்
கேரள மாநிலத்தில் மேலும் ஒருவருக்கு அமீபிக் மூளைக்காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. வயநாடு மாவட்டம், தருவானாவைச் சேர்ந்த அந்த 30 வயது நபர், சென்னையில் பணிபுரிந்து வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அந்த இளைஞரின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், அமீபிக் மூளைக்காய்ச்சல் காரணமாக கோழிக்கோடு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை எட்டாக அதிகரித்துள்ளது.
Next Story
