Amitshah | மம்தாவை இறங்கி அடிக்கும் அமித்ஷா - தமிழகத்தைவிட தகிக்கும் மேற்கு வங்கம்
மம்தாவை இறங்கி அடிக்கும் அமித்ஷா - தமிழகத்தைவிட தகிக்கும் மேற்கு வங்கம்
#amitshah #mamatabanerjee #tmcvsbjp
மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சியில் பெண்கள் நள்ளிரவில் கூட வெளியே செல்லலாம் என அமித்ஷா பேச்சு
மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் பெண்கள் நள்ளிரவு ஒரு மணிக்கு கூட வெளியே செல்லலாம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளார். மேற்கு வங்கத்தின் வடக்கு 24 பர்கானாஸ் பகுதியில் நடைபெற்ற பிரம்மாண்ட ரோடு ஷோவில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக ஆட்சிக்கு வந்தால் பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்றார். பெண்கள் மாலை 7 மணிக்கு மேல் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என மம்தா பானர்ஜி கூறுவதாகக் குற்றம்சாட்டிய அமித் ஷா, பாஜக ஆட்சியில் பெண்கள் நள்ளிரவில் கூட அச்சமின்றி வெளியே செல்ல முடியும் என உறுதியளித்தார்.
