கெஜ்ரிவால் மீது கை வைத்த அமித் ஷா.. டெல்லி அரசின் முக்கிய அதிகாரம் பறிப்பு -

x

டெல்லி அரசின் அதிகாரத்தை குறைக்கும் அவசர சட்டத்திருத்த மசோதா

கடும் எதிர்ப்புக்கிடையே மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. அவசர சட்ட திருத்த மசோதாவை எதிர்க்கட்சிகள் நிராகரிக்க என்ன காரணம்?

விரிவாக பார்க்கலாம் இந்த தொகுப்பில்....

டெல்லியில் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையிலான அரசுக்கும், துணை நிலை ஆளுநருக்கும் இடையே அடிக்கடி மோதல் போக்கு நிலவுகிறது. இந்நிலையில்,

டெல்லி யூனியன் பிரதேசத்தில், ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம், பதவிக்காலம், ஊதியம் மற்றும் இடமாற்றம் அல்லது பதவி உயர்வு தொடர்பான விஷயங்களில் யாருக்கு அதிகாரம் இருக்கிறது? என்பதில் டெல்லி அரசுக்கும் மத்திய அரசுக்கும் இடையே மோதல் முற்றியது.

இதையடுத்து, பிற மாநில அரசுகளுக்கு உள்ள அதிகாரத்தை போலவே, டெல்லி அரசுக்கும் அதிகாரம் உண்டு என்பதை உறுதிப்படுத்தக் கோரி ஆளும் ஆம் ஆத்மி சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் கடந்த மே மாதம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதில்

டெல்லிக்கு மாநில அந்தஸ்து இல்லாவிட்டாலும் சட்டம் இயற்றும் அதிகாரம் இருக்கிறது எந்பதையும்,

ஜனநாயக நாட்டில் துணைநிலை ஆளுநரைவிட மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசிடமே அதிகாரம் இருக்க வேண்டும் என்றும், ஆகவே

டெல்லியில் அரசு அதிகாரிகளை கட்டுப்படுத்தும் அதிகாரம் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுக்கே உண்டு என டெல்லி அரசுக்கு ஆதரவாக தீர்ப்பளித்தது. இந்நிலையில்,

தீர்ப்பு வந்த சில நாட்களிலேயே, மேற்கண்ட விஷயங்களில் மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளது என்பதை நிலைநாட்ட ஒரு அவசர சட்டம் கொண்டு வர மத்திய அரசு முனைப்பு காட்டியது. அந்த வகையில்,

தேசிய தலைநகர் பிரதேச டெல்லி அரசு சட்டத்தை 1991 ஐ திருத்தும் வகையிலும்

டெல்லி அரசின் அதிகாரத்தை குறைக்கும் வகையிலும் சட்ட திருத்த மசோதா கொண்டு வரப்ப்ட்டு உள்ளது. இதனை தொடர்ந்து,

தேசிய தலைநகர குடிமைப் பணி ஆணையத்தை உருவாக்குவதற்கான அவசர சட்டத்தை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பிறப்பித்தார்.

டெல்லி தேசிய தலைநகர் பகுதி அவசர சட்ட திருத்த மசோதாவை எதிர்க்கட்சிகள் நிராகரிக்க என்ன காரணம்?

இந்த சட்டத்தின் முக்கிய அம்சங்கள் தான் என்னென்ன?

உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை நிராகரிக்கும் வகையில்கொண்டு வரப்பட்டுள்ள இந்த சட்டத்தின் படி டெல்லி தேசிய தலைநகர குடிமைப்பணி ஆணையத்திற்கு டெல்லி முதல்வர் தலைமை தாங்குவார்.

டெல்லியின் நிர்வாகியாக துணைநிலை ஆளுநர் செயல்படுவார் என்றும் குடிமைப் பணி அதிகாரிகள் நியமனம் மற்றும் பணியிட மாறுதல் விவகாரத்தில் அவருக்கே இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இதன்மூலம், டெல்லி அரசின் ஏ பிரிவு அதிகாரிகள் மற்றும் பிற யூனியன் பிரதேசங்களில், குடிமைப் பணி அதிகாரிகள் நியமனம் மற்றும் மாறுதல் விவகாரத்தில் பரிந்துரை செய்வதற்கான அதிகாரம் மத்திய அரசின் கீழ் வந்துள்ளது. இந்நிலையில்,

மக்களவையில் அவசர சட்ட திருத்த மசோதா கொண்டு வர கடும் எதிர்ப்பு நிலவியது. எனினும், இந்த மசோதா தொடர்பான விவாதம் கிட்டத்தட்ட நான்கு மணிநேரம் நடைபெற்றது. அப்போது எம்.பிக்களின் பல்வேறு கேள்விகளுக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா பதில் அளித்தார்.

இதனிடையே, மக்களவையில் இருந்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்த நிலையில், பெரும்பான்மை எம்.பிக்களை பெற்று அசுர பலத்துடன் விளங்கும் ஆளும் பாஜக அரசு, அவசர சட்ட மசோதாவை குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றியது. மறுபுறம் மத்திய அரசின் இந்த போக்கை எதிர்க்கட்சிகள் கடுமையாக கண்டித்துள்ளன. இதனிடையே, டெல்லி அரசின் கீழ் இருந்த முக்கிய அதிகாரத்தை தற்போது அவசர சட்டம் மூலம், மத்திய அரசு தன் வசப்படுத்தியிருப்பது அனைத்து மாநில அரசுகளுக்கு ஒருவித அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்பதே அரசியல் நிபுணர்களின் கருத்தாக உள்ளது.

.


Next Story

மேலும் செய்திகள்