Ambedkar | Birthday | அம்பேத்கர் பிறந்தநாள் - நாடாளுமன்றத்தில் தலைவர்கள் மரியாதை
சட்ட மாமேதை அம்பேத்கரின் 135வது பிறந்தநாளை முன்னிட்டு, டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். அம்பேத்கரின் திருவுருவச் சிலைக்கு அருகில், மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த திருவுருவப் படத்திற்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, குடியரசு துணைத்தலைவர் ஜெகதீப் தங்கர், பிரதமர் நரேந்திர மோடி மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
இதேபோல், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மத்திய அமைச்சரும், பா.ஜ.க தலைவருமான ஜே.பி.நட்டா, காங்கிரஸ் நாடாளுமன்ற குழு தலைவர் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சித்தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோரும் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு பாடல்களும் இசைக்கப்பட்டன.
Next Story
