ஆனந்த் - ராதிகா திருமணத்தில் அனுமதியின்றி நுழைந்த இருவர்.. வழக்கு பதிந்த மும்பை போலீசார்

ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் திருமண விழாவில் அழைப்பிதழ் இல்லாமல் சென்ற இரண்டு பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அனுமதியின்றி நுழைந்த இருவரும் ஆந்திராவில் இருந்து வந்ததாகவும், ஒருவர் யூ- டியூபர் என்றும், மற்றொருவர் தன்னை தொழிலதிபர் என கூறி கொள்வதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இருவர் மீதும் வழக்கு பதிந்து நோட்டீஸ் அனுப்பிய போலீசார், பின்னர் அவர்களை விடுவித்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com