`அம்பானி போல் ஆடம்பரமாக நடைபெறும் அதானி வீட்டு திருமணம்?' - கௌதம் அதானி சொன்ன தகவல்
அம்பானி போல் ஆடம்பரமாக நடைபெறும் அதானி வீட்டு திருமணம்?' - கௌதம் அதானி சொன்ன தகவல்
அம்பானியை தொடர்ந்து அதானி வீட்டு திருமணமும் ஆடம்பரமாக நடைபெற இருப்பதாக செய்திகள் வெளியாகி வந்த நிலையில், இதற்கு இந்திய கோடீஸ்வரரான கௌதம் அதானி மறுப்பு தெரிவித்துள்ளார்.
அதானி மகனான ஜீத் அதானியின் திருமணத்தில் எலான் மஸ்க், டெய்லர் ஸ்விஃப்ட் உள்ளிட்ட உலகப் பிரபலங்கள் கலந்து கொள்ள இருப்பதாக இணையத்தில் பேசப்பட்டு வந்தன.
இந்நிலையில், சூரத்தை சேர்ந்த வைர வியாபாரி ஜெய்மின் ஷாவின் மகள் திவா ஷாவுடனான தனது மகனான ஜீத் அதானியின் திருமணம் மிகவும் எளிமையான பாரம்பரிய முறையில் வருகின்ற பிப்ரவரி 7ஆம் தேதி நடைபெற இருப்பதாகவும், இதில் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மட்டும் கலந்து கொள்ள இருப்பதாகவும் கௌதம் அதானி தெரிவித்துள்ளார்.
Next Story
