Amazon | Swiggy | மாட்டிக் கொண்ட அமேசான், ஸ்விக்கி, பிக் பாஸ்கெட்.. லைசென்ஸ் சஸ்பெண்ட்
மாட்டிக் கொண்ட அமேசான், ஸ்விக்கி, பிக் பாஸ்கெட்.. லைசென்ஸ் சஸ்பெண்ட்
கர்நாடகாவில் ஊமத்தங்காய் விதைகள் மற்றும் பழங்களை ஆன்லைனில் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்டதாக எழுந்த புகாரை தொடர்ந்து, அமேசான், ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் மற்றும் பிக்பாஸ்கெட் ஆகிய நிறுவனங்களின் உணவு உரிமங்களைக் அரசு இடைநிறுத்தம் செய்துள்ளது. விஷத்தன்மை கொண்ட இந்த தாவரப் பொருட்கள் தடையின்றி விற்பனை செய்யப்பட்டது தொடர்பாகப் புகார்கள் எழுந்த நிலையில், உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் சட்டத்தின் கீழ் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் சுகாதாரப் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் விசாரணை நிறைவடையும் வரை இந்த நிறுவனங்கள் அங்குச் செயல்பட கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
